ஆழ்வார்பேட்டையில் ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்..!

0 1671
ஆழ்வார்பேட்டையில் ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்ரீமதி ஹெர்பல் ஆயுர்வேத கேர் நிறுவனத்துடன் இணைந்து எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார்.

அதேபோல், திருவல்லிக்கேணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்து நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், இந்த வாகனங்கள் மூலம் முட்டை, பிரெட் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments