அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டமன்றத்தில் உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ளும் மசோதா நிறைவேற்றம்

0 1731
அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டமன்றத்தில் உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ளும் மசோதா நிறைவேற்றம்

கைத்துப்பாக்கிகளை எந்த உரிமமும் இன்றி மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய மசோதா, அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஆளுநர் கிரேக் அப்பாட்டின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளதால் இந்த மசோதா விரைவில் சட்டமாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் ஒப்புதலை பெற்றால், அமெரிக்காவில் உரிமம் இன்றி துப்பாக்கி வைக்க அனுமதி அளிக்கும் 21 ஆவது மாநிலமாக டெக்சாஸ் மாறும். இந்த மசோதாவானது, சட்டத்தை மதிக்கும் டெக்சாஸ் மக்களின் சுய பாதுகாப்புக்காக, கடவுள் அளித்த உரிமையின் படி உருவாக்கப்பட்டுள்ளது என மசோதாவை தயார் செய்த டெக்சாஸ் ரிபப்ளிகன் செனட்டர் மேட் ஸ்காபர் டுவிட் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments