கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

0 1899

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும், கொரோனா  தொற்றால் இறப்பு ஏற்பட்டால் 10 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு ஊக்கத் தொகையை மூவாயிரம் ரூபாயில் இருந்து ஐயாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 5 லட்ச ரூபாயில் இருந்து  10 இலட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments