தடுப்பூசி வேண்டுமா? ஆர்டர் செய்து முன்பணம் செலுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ஃபைசர் நிறுவனம் நிபந்தனை

0 2277

தடுப்பூசி தேவை என்றால் முன்னதாகவே ஆர்டர் செய்து முன்பணம் செலுத்துமாறு, ஃபைசர் நிறுவனம்,மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்திய அதிகாரிகளுடன் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளின் போது ஃபைசர் இதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதே பாணியில் தான் இதர நாடுகளும் தங்களிடம் இருந்து தடுப்பூசி வாங்குவதாகவும் பைசர்தெரிவித்துள்ளது.

  மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருவதாக சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வாலும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments