முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று அரிதாகவே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை தகவல்

0 4035

முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று அரிதாகவே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறும்போது, ஏப்ரல் இறுதிக்குள் 101 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் 10 ஆயிரத்து 300 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாகவும் இந்த விகிதாச்சாரம் ஒவ்வொரு 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவர்களில் 3ல் 2 பங்கு பெண்கள் எனக் குறிப்பிட்ட அவர்கள், நோய் தாக்கிய பெண்களின் சராசரி வயது 58க்கும் அதிகம் என்றும் குறிப்பிட்டனர். ஆனால் மீண்டும் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments