மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1446

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை துவங்கி ஆறு மாத காலம் நிறைவு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்காதது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, அவற்றை ரத்து செய்ய சட்டம் இயற்றிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments