டாஸ்மாக் கடையின் சுவற்றில் பெரிய ஓட்டை போட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள்... போலீஸ் வலைவீச்சு

0 4657

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் ஓட்டை போட்டு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பின்னலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசின் மதுபானக் கடை ஊரடங்கு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது. இந்தக் கடையில் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் கடையின் சுவற்றில் பெரிய ஓட்டையை போட்டு அதன் வழியாக உள்ளே சென்று கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments