கொரோனா ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய மாணவர்கள்... ட்ரோன் கேமிரா மூலம் மடக்கிப் பிடித்து அறிவுரை வழங்கிய போலீசார்..!

0 18264

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மாணவர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் மடக்கிப் பிடித்து அறிவுரை வழங்கினர்.

சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொது முடக்கத்தை மீறி வெளியே வருபவர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். பாரதி நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மாணவர்களை ட்ரோன் கேமிரா மூலம் மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments