கொரோனாவிற்கு பெற்றோர் இருவரையும் இழந்து 577 குழந்தைகள் தவிப்பு: மத்திய அரசு தகவல்

0 1280

கொரோனா 2ஆவது அலையில் நாடெங்கிலும் 577 குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்து அனாதைகளாகி உள்ளது தெரியவந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, அனைத்து மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விபரம் தெரியவந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை பறிகொடுத்த இந்த குழந்தைகள் அனைவரும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments