கொரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் மற்றவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

0 5974

கொரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் மூலம் 24 மணி நேரத்திற்கு பின்னர் மற்றவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சுதீர் குப்தா,  கடந்த ஓராண்டு காலமாக கொரோனாவால் உயிரிழந்த சுமார் 100 உடல்களில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்ததாக தெரிவித்தார். 

ஒருவர் இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் அவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்றார். எனவே ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமானபின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments