விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

0 1502

டெல்லியில் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகள் பேரணியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், சாலைகள் அடைக்கப்பட்டால் ஆக்ஸிஜன் வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் பிரச்னை உச்ச நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு வருவதாகவும், எனவே உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments