சி.பி.ஐ. புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஷ்வால் நியமனம்

0 1437

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஷ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய குழு மூன்று பெயர்களை இறுதிப் பரிசீலனைக்கு தெரிவு செய்தது.

இதன் அடிப்படையில், சிபிஐயின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஷ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமைச்சரவை நியமனக் குழு, ஜெய்ஷ்வால் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளது.

1985ம் ஆண்டு ஐ.பி.பி.எஸ். அதிகாரியான ஜெய்ஷ்வால், மகாராஷ்டிர முன்னாள் டிஜிபி-யாவார். தற்போது அவர் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments