மடர்னா, ஃபைஸர் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு இந்தியா வருகை

0 1377

கொரோனா தடுப்பூசிகளான மடர்னாவும், ஃபைசர் நிறுவன தடுப்பூசியும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஒற்றை டோஸ் தடுப்பூசியான மடர்னா அடுத்த ஆண்டு இந்தியாவில் தடுப்பூசியை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் அதற்காக சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபைஸர் நிறுவனமும் அடுத்த ஆண்டு இந்தியாவில் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளது.

ஆனால் இழப்பீடு உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் வி என 3 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments