நாடு முழுவதும் 20 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

0 1086

இந்தியாவில் கடந்த 130 நாட்களில் 20 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16ம் தொடங்கின. நேற்று வரை நாடு முழுவதும் 20 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 991 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18 லட்சத்து 7 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 6 கோடியே 20 லட்சம் பேர் முதல் டோஸ் ஊசியை போட்டுக் கொண்டுள்ளதாகவும், இந்த வயதிற்கு உட்பட்ட ஒரு கோடிப் பேர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments