கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 1286
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

கத்தார் சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஈரான் நாட்டிலிருந்து, அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 24 பேர், கடந்த மார்ச் 25-ஆம் தேதி கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலையடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் அரசு உடனடியாக தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் நிலையைக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, தாயகத்துக்கு அனுப்பிட வேண்டும் என ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments