மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

0 2569
மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா பரவல் உச்சத்தை தொட்டிருக்கும் இன்றைய சூழலில், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், அதற்கு இன்னும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது, எத்தனை நாட்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்க முடியும் என்பன உள்ளிட்ட விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments