தமிழகத்தில் ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா.. 468பேர் பலி..!

0 3579
தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 34ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா

மிழகத்தில் 4வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரம் பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் 468 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் 4 ஆயிரத்து 41 பேருக்கும் கோவையில் 3 ஆயிரத்து 632 பேருக்கும் ஈரோட்டில் ஆயிரத்து 555 பேருக்கும் மதுரையில் ஆயிரத்து 358 பேருக்கும் திருப்பூரில் ஆயிரத்து 854 பேருக்கும் கன்னியாகுமரியில் ஆயிரத்து 133 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 6 ஆயிரம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments