தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை-எடப்பாடி பழனிசாமி

0 2383
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்த அவர், அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினாலே உயிரிழப்பை தடுக்கலாம் என்றார்.

மேலும், காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பதோடு, தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 3லட்சமாக உயர்த்தவும், 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கவும் அவர் வலியுறுத்தினார். 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பினருக்கு கொரோனா நிவாரணத் தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments