விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து; ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

0 1250
விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து; ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மால்காபுரம் பகுதியில் இயங்கி வரும் இந்த ஆலையில், மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீப்பிழம்புடன் கரும்புகையும் அந்த இடத்தைச் சூழ்ந்தது.

ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கச்சா எண்ணையை வடிகட்டும் இடத்திலுள்ள குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கடற்படை வீரர்களும் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments