"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்க முடிவு" -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

0 1789
"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்க முடிவு" -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்ற அவர், முதலமைச்சர் ஒப்புதலுக்குப் பின்னர் அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments