வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 1309
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே  நிலவும். 

அடுத்த 24 மணி நேரத்திற்கு  வட தமிழகத்தில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழக மீனவர்கள் 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments