காங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 32 பேர் பலி

0 1500

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில்  உள்ள எரிமலை வெடித்து சிதறியதில் 32 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஒரு வாரமாகவே சீற்றத்துடன் காணப்பட்ட நைராங்கோ (Nyiragongo)  எரிமலை, நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. அதன் நெருப்பு குழம்புகளும், புகையும் அங்கிருந்த ஏராளமான வீட்டை சேதமடைய செய்தன.

இதனால் எரிமலையை சுற்றியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எரிமலையிலிருந்து லாவா தீப்பிழம்புகள் நூறு மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடின. எரிமலை வெடிப்பில் சிக்கி 170 குழந்தைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments