தீவிரப் புயலாக மாறிய யாஸ்..ஒடிசா- மேற்கு வங்கம் இடையே அதிதீவிரப் புயலாக நாளை மதியம் கரையைக் கடக்கும்..!

0 1538
வங்கக்கடலில் தீவிரப்புயலாக நிலவும் யாஸ், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தீவிரப்புயலாக நிலவும் யாஸ், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கு தென்கிழக்கே 320 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப்புயலாக உருவெடுக்கும். இந்த அதி தீவிரப்புயல் நாளை நண்பகலில் ஒடிசாவின் பாராதீப் - மேற்குவங்கத்தின் சாகர் தீவுகள் இடையே, பாலசோர் அருகே கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில், ஒடிசாவின் 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் 10 லட்சம் பேரை முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, படகுகள் அனைத்தும் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments