தமிழகத்தில் 38 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர்

0 2205

மிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்கள் ஆய்வு தொடரும் என்றார். மேலும் கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதின் விளைவாக, கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments