தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும்: தடுப்பூசி தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் தகவல்

0 3847

தடுப்பூசி பற்றாக்குறை 6 வாரங்கள் மட்டுமே நீடிக்கும் எனவும் அதன்பின்னர் அதற்கு தட்டுப்பாடு வராது எனவும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கொரோனா வைரஸ் சில காலம் நீடிக்கும் என்பதாலும், அது மரபணு மாற்றங்களை எடுத்து வருவதாலும், மக்களை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான தடுப்பூசி திட்டத்தை அரசு மேற்கொள்கிறது என்றார்.

ஜூலை மாதம் முதல் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மாதம் தோறும் 20 முதல் 25 கோடியாக அதிகரிக்கும் என அவர் கூறினார். அத்துடன் ஜைடஸ் கெடிலா, ஸ்புட்னிக்-வி மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளும் வருவதால் பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments