மயக்க மருந்து கலந்த கர்சிப்பை வைத்து காவலர் வீட்டிலேயே கொள்ளையடித்த கொள்ளையர்கள்..!

0 4198

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி காவலர் மனைவியின் முகத்தில் மயக்க மருந்து கலந்த கர்ச்சிப்பை வைத்து, 5 சவரன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமுல்லைவாயல், எஸ்.எம் நகர், காவலர் குடியிருப்பை சேர்ந்த தர்மராஜன் என்பவரின் மனைவி சந்திரலேகா முதல் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி வீட்டுக்குள் நுழைந்த இரு இளைஞர்கள், மயக்க மருந்து கலந்த கைகுட்டையை சந்திரலேகாவின் முகத்தில் வைத்துள்ளனர்.

அவர் மயக்கடைந்த நிலையில், பீரோவின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சந்திரலேகா அங்குள்ள போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments