சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் பதவிக்கு 3 பேர் பெயர் பரிசீலனை

0 1074

மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இடைக்கால இயக்குநராக கூடுதல் இயக்குநர் பிரவீண் சின்ஹா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கலந்தாலோசித்தனர்.

கூட்டத்தின் முடிவில், மகாராஷ்டிரா டிஜிபி சுபோத் குமார், சசத்ர சீமா பால் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கே.ஆர். சந்திரா மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சிறப்புச் செயலாளர் விஎஸ்கே கவ்முதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிபிஐயின் இயக்குநராக விரைவில் அறிவிக்கப்படுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments