கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஒடிசாவில் சகோதரரின் திருமணத்தில் நடனம் ஆடிய பெண் தாசில்தார்... வைரல் வீடியோ..!

0 4149

ஒடிசாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி சகோதரரின் திருமணத்தில் நடனம் ஆடிய பெண் தாசில்தார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sukinda பகுதியில் தாசில்தாராக பணிபுரியும் Bulbul Behera என்ற பெண் அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது சகோதரரின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அவர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது.

அதையடுத்து  JAJPUR மாவட்ட ஆட்சியர்  அந்த பெண் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments