புதுமையான முகக்கவசத்தை தயாரித்துள்ள கேரள பி.டெக் மாணவர்

0 16396

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நவீன மற்றும் வித்தியாசமான முகக்கவசத்தைத் தயாரித்துள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த கெவின் ஜேக்கப் என்பவர் பி.டெக் முதலாமாண்டு படித்து வருகிறார். பொதுமக்கள் கொரோனாவுக்காக முகக்கவசம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேசும் போது அதனை இறக்கி விட்டு பேசுகின்றனர்.

இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்தார். அதன்படி ஜேக்கப் தயாரித்த முகக்கவசத்தில் பேசுவதற்கு சிறிய மைக் மற்றும் தெளிவாகக் கேட்பதற்காக ஸ்பீக்கர் ஹெட் செட்டும் தயாரித்துள்ளார். இந்தவகை முகக்கவசங்கள் பாதுகாப்பனதாகவும், எளிதில் மற்றவர்களிடம் பேசவும்முடியும் என கெவின் ஜேக்கப் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments