கட்டாய கொரோனா சோதனைக்கு வர மறுத்த சிறுவன்... தாக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்

0 2450

கர்நாடக மாநிலத்தில் கட்டாய கொரோனா சோதனைக்கு மறுத்த சிறுவனை சுகாதாரத்துறை அதிகாரிகள் சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ வெளியாகி உள்ளது.

பெங்களூருவின் மையப்பகுதியான நாகரத்பேட்டை என்ற இடத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 17 வயதுச் சிறுவனை, கொரோனா சோதனைக்கு அழைத்தனர். சிறுவன் மறுக்கவே பலவந்தமாக இழுத்துள்ளனர்.

அப்போதும் சிறுவன் மறுக்கவே சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் அந்தச் சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இது தொடர்பான வீடியோ வெளியானதால், சிறுவனைத் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments