கொரோனாவுக்கு எதிராக புதிய தடுப்பு மருந்து அறிமுகம்

0 4938

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் இந்தியா, கொரோனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் என அழைக்கப்படும் இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக சிப்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த மருந்து லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் இதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை குறைவதாகவும், உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளது. 2 டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் ஒரு டோசின் விலை 59ஆயிரத்து 750 ரூபாய் ஆகும். இரு டோசும் இணைந்த பாக்கெட்டின் விலை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments