தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27,026 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 2703
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27,026 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 3- வது நாளாக சற்று குறைந்துள்ளது. அதேநேரம் வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 27 ஆயிரத்து 026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 21 வயது சேலம் இளைஞர், 23 வயது ராணிப்பேட்டை இளம்பெண், 25 வயது திருச்சி இளம்பெண், 90 வயது மற்றும் 91 வயது திருச்சி முதியவர்கள், 96 வயது செங்கல்பட்டு முதியவர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 404 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

சென்னையில் 27 வயது இளம்பெண்,90 வயது முதியவர், 92 வயது மூதாட்டி, 94 வயது முதியவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியானார்கள்.

சென்னையில் புதிதாக 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 4,277 பேரும் செங்கல்பட்டில 1,899 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் - 1,808, ஈரோடு - 1,467 . மதுரை - 1,453 , திருச்சி - 1,268, திருவள்ளூர் - 1231 , திருவண்ணாமலை - 1,120, கன்னியாகுமரி -1,083 மற்றும் காஞ்சிபுரத்தில் 813 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1,295 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 3,01,580 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments