அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஜூன்.14 முதல் தேர்வு; தேர்வுக்கு பணம் கட்டாத மாணவர்கள் ஜூன்.3 ஆம் தேதிக்குள் பணம் கட்டலாம் -அமைச்சர் பொன்முடி

0 3743
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஜூன்.14 முதல் தேர்வு; தேர்வுக்கு பணம் கட்டாத மாணவர்கள் ஜூன்.3 ஆம் தேதிக்குள் பணம் கட்டலாம் -அமைச்சர் பொன்முடி

ஜூன் 14ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஜூலை 30க்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்வுக்கு பணம் கட்டாத மாணவர்கள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments