கொரோனாவை ஒழிக்க தமிழகத்திற்கு அமெரிக்காவின் உதவி..! நிதி அமைச்சர் பிடிஆருக்கு அமெரிக்க செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் உறுதி

0 7156
கொரோனாவை ஒழிக்க தமிழகத்திற்கு அமெரிக்காவின் உதவி..! நிதி அமைச்சர் பிடிஆருக்கு அமெரிக்க செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் உறுதி

மெரிக்கா உலக நாடுகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள 8 கோடி தடுப்பூசிகளில் தமிழகத்திற்கும் ஒரு பங்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் ரெவரண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறுதி அளித்துள்ளார்.

ஜெஸ்ஸி ஜாக்சனுடன் பழனிவேல் தியாகராஜன் ஜூம் காணொலி வாயிலாக பேசிய போது இந்த உறுதி அளிக்கப்பட்டது. அதிபர் ஜோ பைடனிடம் இந்த கோரிக்கையை விடுக்குமாறு தாம் ஜெஸ்ஸி ஜாக்சனிடம் கேட்டுக் கொண்டதாக பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜெஸ்ஸி ஜாக்சன் தனிப்பட்ட முறையில் அனுப்பிய செய்தியில், உங்களால் முடியும் என்றும், உதவிகள் வருகின்றன எனவும்,நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது, கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments