கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது; தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1611

கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில், கொரோனா விதிமுறைகளை ஆளும் கட்சியினர் பின்பற்றாததால், நிவாரணப்பொருட்களை மக்களின் வீட்டுக்கே சென்று வழங்கிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை ஆனால் ஆளுங்கட்சி சின்னத்தை நியாய விலை கடைகளில் பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டனர்.

நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments