யாஸ் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்றுத் தீவிரப் புயலாக உருவெடுக்கும்

0 2049

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் யாஸ் புயல் புதன் நண்பகலில் ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பகல் பதினொன்றரை மணி நிலவரப்படி கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒடிசாவின் பாராதீப்புக்குத் தெற்கு தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவில் யாஸ் புயல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதையடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாகவும் உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அதிதீவிரப் புயல் புதன் நண்பகலில் ஒடிசாவின் பாராதீப், மேற்குவங்கத்தின் சாகர் தீவுகள் இடையே பாலசோர் அருகில் கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments