மணல் கடத்தலை தடுக்கச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு ..

0 41569
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமை காவலரின் தலையில் அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமை காவலரின் தலையில் அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழ்கொடுங்கலூர் சுகநதி ஆற்றிலிருந்து மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவ்வூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் குமார் என்பவர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, மணல் கடத்தல் கும்பல் அவரது தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments