மதுரை To தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி.. விசாரணையை துவக்கிய மத்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம்

0 66988
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து, நடுவானில் திருமணம் நடத்திய விவகாரத்தில் மத்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கி உள்ளது.

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து, நடுவானில் திருமணம் நடத்திய விவகாரத்தில் மத்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கி உள்ளது.

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த  தீக்ஷனா மற்றும் ராகேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் 130 பேர், வாடகை விமானம் எடுத்து தூத்துக்குடியில் இருந்து மதுரை வரும் போது நடுவானில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.  இதில் கொரோனா விதிகள் மீறப்பட்டதா என  முழு அறிக்கை தருமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த விமானத்தில் இருந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை.  இதற்கு பதிலளித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், சுற்றுலா முகவர் ஒருவர் வாயிலாக குறிப்பிட்ட விமானம்  வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதுடன், விமானத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டதாகவும்  ஆனால் அதனை பயணிகள் பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments