ஆம்புலன்ஸை அழைத்து பல மணி நேரம் ஆகியும் வராததால் சரக்கு வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளி

0 1901
மதுரையில் ஆம்புலன்ஸை அழைத்து பல மணி நேரம் ஆகியும் வராததால் சரக்கு வாகனத்தில் கொரோனா அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரையில் ஆம்புலன்ஸை அழைத்து பல மணி நேரம் ஆகியும் வராததால் சரக்கு வாகனத்தில் கொரோனா அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

முடுவார்பட்டியைச் சேர்ந்த பரணிமுத்து என்பவர் காய்ச்சல், தொடர் இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து அரசு ஆம்புலன்சை உறவினர்கள் அழைத்தும் வராதததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திறந்த வெளியில்  அவர் அவசர அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments