குதிரையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்; ஊரடங்கை மீறியதாக கிராமத்திற்கு சீல் வைத்த போலீசார்

0 3745
குதிரையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்; ஊரடங்கை மீறியதாக கிராமத்திற்கு சீல் வைத்த போலீசார்

ரடங்குக்கு மத்தியில் கர்நாடகாவில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது தொற்று பரவும் அச்சத்துக்கு வழிவகுத்துள்ளது.

பெலகாவி மாவட்டம் மரடிமத் (Maradimath)கிராமத்தில் மத அமைப்பை சேர்ந்த குதிரை ஒன்று நேற்று காலை உயிரிழந்தது. இதனையறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், குதிரையின் இறுதி ஊர்வலத்தில் சாரை சாரையாக பங்கேற்றனர்.

ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மரடிமத் கிராமத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments