கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார்... மற்ற வீரர்களை அச்சுறுத்ததுவதற்காகத் தாக்குதலைப் படம்பிடித்ததாகக் குற்றச்சாட்டு

0 1507

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார், மற்ற வீரர்களுக்குத் தன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காகத் தாக்குதலைப் படம்பிடித்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மே 4ஆம் நாள் டெல்லி சத்ராசல் விளையாட்டரங்கில் சுசில்குமாரும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து இளம் வீரர் சாகர்ராணாவையும், அவர் நண்பர் இருவரையும் கடுமையாகத் தாக்கினர். படுகாயங்களுடன் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சாகர்ராணா உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த சுசில்குமார், அவர் கூட்டாளி அஜய் ஆகிய இருவரையும் காவல்துறையினர் நேற்றுக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மற்ற மல்யுத்த வீரர்களுக்குத் தன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, சாகர் ராணாவைத் தாக்கியதைப் படம்பிடிக்கும்படி தனது நண்பன் பிரின்சிடம் சுசில்குமார் கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments