தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் வலிமை?

0 8757

கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு தாமதமாவதால், நடிகர் அஜித்தின் வலிமை படம், ரஜினியின் அண்ணாத்த படத்தோடு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துவிட்டது. சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படபிடிப்பு பணிகள் முடங்கின.

இதனால் திட்டமிட்டபடி வலிமை படத்தை ஆக்ஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆகையால், வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அண்ணாத்த படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments