தடுப்பூசிகளால் தீவிர நோய் தொற்று மற்றும் மரணங்களை தவிர்க்க முடியும்.. புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்

0 1552
தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் சேரும் நிலையில் இருந்தும் இறப்பில் இருந்தும் காப்பாற்றும் திறன் வாய்ந்தவை என அவற்றின் திறன் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் மருத்துவமனையில் சேரும் நிலையில் இருந்தும் இறப்பில் இருந்தும் காப்பாற்றும் திறன் வாய்ந்தவை என அவற்றின் திறன் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஃபைசர்-பயோன்டெக்கின் தடுப்பூசி, மிகவும் ஆபத்தான இரண்டு மரபணு மாற்ற வைரசுகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இரண்டு டோசுகள் போடப்பட்ட பிறகு கொரோனாவில் இருந்து தடுப்பூசிகள்,85 சதவிகித பாதுகாப்பை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, நோய் தீவிரமாவதில் இருந்தும், மரணத்தில் இருந்தும், தடுப்பூசிகள் 100 சதவிகிதம் வரை பாதுகாப்பை தருவதும் உறுதியாகி உள்ளது. 

இந்த ஆய்வு முடிவுகள்,தடுப்பூசி திட்டம்  குறித்த சரியான கணக்கீடுகளை செய்யவும், தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கவும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments