செக் போஸ்டை கடக்க முயன்றபோது ஏற்பட்ட கோர விபத்து... இளைஞர் உயிரிழப்பு..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 6219

தெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி கை அசைத்தார்.

ஆனால் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த இளைஞர், தலையை கீழே சாய்த்தபடி சோதனை சாவடியை கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பைக் ஓட்டிய இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments