மாணவிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர்.. நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

0 1796
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவன், மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக எழுந்துள்ள புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார்.

கே.கே.நகரில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் பள்ளியில் 20 ஆண்டுகளாக வணிகவியல் ஆசிரியராக பணிபுரியும் ராஜகோபாலன் என்பவன், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ராகஜோபாலன் அனுப்பிய மெசேஜ்களுடன் பள்ளி நிர்வாகத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி.கனிமொழி, சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீதும், அதனை கண்டுகொள்ளாத பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் எனவும் கனிமொழி உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments