தமிழகம் வந்த 12,85,060 டோஸ் கொரோனா தடுப்பூசிகள்

0 2320
தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்காக 12 லட்சத்து 85 ஆயிரத்து 60 கொரோனா தடுப்பூசி வந்துள்ளன.

தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்காக 12 லட்சத்து 85 ஆயிரத்து 60 கொரோனா தடுப்பூசி வந்துள்ளன.

இதில் கோவேக்சின் தடுப்பூசி1 லட்சத்து 66 ஆயிரத்து 530 டோசுகளும், கோவிஷீல்டு 11 லட்சத்து 18 ஆயிரத்து 530 டோசுகளும் உள்ளன. இவை பல்வேறு  மாவட்டங்களுக்கு இரண்டு தவணைகளாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இவை,முன்னுரிமை அடிப்படையில் செய்தித்தாள், பால் விநியோக பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், மின் வாரிய பணியாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருந்தக பணியாளர்கள், ஓட்டுநர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் இதர தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு போடப்படும். 

தடுப்பூசியை வீணாக்க கூடாது என தடுப்பூசி மையங்களுக்கு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments