கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அவசியம் - முதலமைச்சர்

0 3526

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிகளை அனைவரும் தவறாது கடைபிடிக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக அரசு பதவியேற்றதில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.
கொரோனா பாதித்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தான், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாகவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதே முக்கிய நோக்கம் எனவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

மக்களின் நன்மைக்காக தான் ஊரடங்கு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி விட சிறந்த ஆயுதம் இல்லை எனவும், அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments