இந்தியா முழுவதும் ஒரே நாளில் 21.23 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்து புதிய சாதனை

0 1157

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாகவும், புதிய சாதனையாகவும் ஒரே நாளில் 21 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து 5வது நாளாக தொடர்ந்து 20 லட்சம் பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 21 லட்சத்து 23 ஆயிரத்து 782 பேருக்கு பெருந்தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தொற்று நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments