இது முகக்கவசமா? உ.பி.யில் சன்னியாசி ஒருவரின் மூலிகை முகக்கவசம்..!

0 5515

உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முகக்கவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் அம்மாநிலத்தில் தினசரி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூகாது பாபா என்ற சன்னியாசி நூலால் சுற்றப்பட்ட முகக்கவசத்தை அணிந்துள்ளார்.

அதனுள் வேப்பிலை மற்றும் துளசி இலையை வைத்து அதனை தனது முகத்தில் அணிந்துள்ளார். மருத்துவக் குணம் வாய்ந்த இரு இலைகளையும் வைத்து தானே இந்த முகக்கவசத்தை உருவாக்கியதாக ஜூகாது பாபா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments