இந்தியாவில் மூன்று லட்சத்தைக் கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை

0 1596

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. பெருந்தொற்று காரணமாக நேற்று இரவு வரை கடந்த ஒரே நாளில் 4 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 751 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் உள்ள ஏனைய நாடுகளை விட அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளே இந்தியாவை விட அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 704 பேருக்கு புதிதாகத் தொற்று உருவானது. அனைத்து மாநிலங்களை விட நேற்று தமிழகத்தில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments